கடலும் கால்களும்!

கால்வந்து நனைக்கும் 
கடற்கரையில் ஓர்நாள் மாலை 
அலைகளை ரசித்தபடி நான்...

பார்முழுதும் பரவிக்கிடக்கும் 
எனது பராக்கிரமத்தைப்  பார்த்தாயா?
என்பதுபோல் கடல் செருக்குடன் 
எனைப் பார்த்தது... 

என் பேராசையைப் பற்றி 
உனக்குத் தெரியாதா?
எனப் பக்குவமாய்க் கேட்டேன்...

சட்டென தனது தவறெண்ணி 
ஒரு பட்டாம்பூச்சியைப் போல் 
நாணமுற்றுப்  பரிதமாகக் 
கிடந்தது கடல்..

மறு வார்த்தை ஏதும்பேசாமல் 
திரும்பி நடக்கத் தொடங்கின 
எனது கால்கள்!

Comments

Popular posts from this blog

கண்!

உடலும் உயிரும்....