Posts

Showing posts from 2021

நீர்மம் !

Image
 தண்ணீரைப் பாருங்கள்  அது எப்போதும் தண்ணீராகவே  இருக்கிறது.... கடல் காய்ந்து முகிலாகி  முகில் உதிர்ந்து  மழையாகிப்   பொழிந்தாலும்... வெள்ளமெனப் பெருக்கெடுத்து  நதியெனவே  மௌனமாகி  நடந்தாலும்... குளம் குட்டை  ஏரியெனத்   தேங்கினாலும் .  குழம்பு கூட்டாகி   கும்பிக்கு சோறென்று  ஆனாலும்..  உமிழ்நீராய் வியர்வையாய்  சிறுநீராய்   ஆனாலும்.. சூதகமாய்  ஆனாலும்  சூல்கொண்டு கருவாய்  உதித்தாலும்... ரத்தமும் சதையுமாகி பேறுகாலப் பனிக்குடமாய்  உடைந்தாலும்... ஈரமாய்  என்றும்  நல்லோர் மனதில்  கசிந்தாலும்.... கருணைக்  கண்களில்  கண்ணீராய்  உதிர்ந்தாலும்....  சாக்கடையாய் வடிந்தாலும்  சாக்காடே  சென்றாலும்.... தீர்த்தக்கரையினில்  ஓர்நாள் சாம்பலாய்க்  கரைந்தாலும்... தண்ணீரைப் பாருங்கள்  அது எப்போதும் தண்ணீரையே   சேர்க்கிறது..... தண்ணீரைப் பாருங்கள்  அது எப்போதும் தண்ணீராகவே  இருக்கிறது.....

வெண்ணிற இரவொன்றில்!

 வெண்ணிற இரவொன்றில் கருத்த முகங்கள் கண்டு அளவளாவி   உடன் பணிசெய்து ஓய்வு நேரத்துப் புகை அனைத்து கடுங்காப்பி ஒரு குவளை அருந்தி பணிமுடித்து எந்திர யானை பொருதி கடிவாளம் முறுக்கி ஆள் அரவமற்ற சாலையின் வளைவுகளில் தீங்குறு காவலர் முகனகத்து வீடு வந்து சேர்கையில் காலை மணியைந்து ஊர்  விழித்துக்கொண்டது   அவன் உரங்கப் போகிறான்!!!

மின்தடை நாளொன்றில்

 இன்றைய மின்தடைக்கு நேற்றே மாவாட்டி வைத்தாயிற்று...  குழம்புக்கு மசாலாப் பொடி பைகள் கைவசமுண்டு.... இன்வெர்டர் இருக்கும் வீடுகள்  இன்னும் இறுமாப்பாய்!!! ஆனாலும் எங்கோ  ஆட்டுக்கல்லின் சத்தம்....

நட்புதிர் காலம் !

Image
 உயிருக்குயிராய் இருந்தவர்கள்  இன்றெங்கோ இருக்கிறார்கள் புதிய புதிய உயிர் நட்புக்களுடன்  என்னுயிர் நட்பு  பால்யகால நட்பானதோ? இலையுதிர் காலமுண்டு  நட்புதிர் காலமுண்டா? பள்ளித்தோழன்  எங்கோ பார்த்த  ஞாபகமானான்! கல்லூரித்தோழன் இன்னும்  ஞாபகத்தில்  மட்டுமிருக்கிறான்! உடன்பணியாற்றிய  நண்பனோ பெயர்தெரியா  தூரதேசத்தில்!    நெடுநாள் கடந்து  திரும்பிப்பார்க்கிறேன்  காலமென்னும் கரையான்  நட்பென்னும் பசுமரத்தை   கொஞ்சம் கொஞ்சமாய்  அரித்துத்த்தான் போயிருக்கிறது.... பேசுவதற்கென்றே பிறந்தவர்கள்  இப்போது பேசாமலே  இருக்கின்றனர்...  வாழ்கின்றனர்.... செல்லரித்த தேகமாய்  நட்பிருக்கிறது ஆனால்  பழைய நெருக்கம்தான் ஏனோ மனதில்    வர மறுக்கிறது! காதல் தோல்வியடைந்த கன்னியொருத்தி  மாற்றானை மணந்த  கதையாய்  அமைதியென்னும்  நஞ்சுகோப்பை  தயக்கத்தைப்  புகட்டுகிறது!   யாருமற்ற  நொடிப்பொழுதில்  காவியமாம்   நட்புக்காலம்  மின்னலென  வெ...

பேருந்து பயணம்

Image
நான் போகும் தொலைவோ   நீங்கள் தெரிந்ததில்லை...  நான் கொடுக்கும் விலையோ  நீங்கள் அறிந்ததில்லை...  அடுத்த நிறுத்தத்தில் இறங்கப்போகும்  சன்னலோர கனவான்களே ! எழுந்திருங்கள்  நான் என் உலகை ரசிக்க!