வெண்ணிற இரவொன்றில்!
வெண்ணிற இரவொன்றில்
கருத்த முகங்கள் கண்டு
அளவளாவி
உடன் பணிசெய்து
ஓய்வு நேரத்துப்
புகை அனைத்து
கடுங்காப்பி ஒரு
குவளை அருந்தி
பணிமுடித்து
எந்திர யானை பொருதி
கடிவாளம் முறுக்கி
ஆள் அரவமற்ற
சாலையின் வளைவுகளில்
தீங்குறு காவலர்
முகனகத்து
வீடு வந்து சேர்கையில்
காலை மணியைந்து
ஊர் விழித்துக்கொண்டது
அவன் உரங்கப் போகிறான்!!!
Comments
Post a Comment